மீண்டும் வெல்லுமா மெக்சிகோ
மெக்சிகோ சிட்டி: உலக கோப்பை கால்பந்தில் மெக்சிகோ, தென் கொரியா அணிகள் மோதுகின்றன. இதில் வெல்லும் பட்சத்தில் மெக்சிகோ அணி, 'ரவுண்டு-16' சுற்றுக்கு முன்னேறலாம்.
அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில், 'பிபா' உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. 48 அணிகள் 12 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, போட்டிகள் லீக் முறையில் நடக்கின்றன. இன்று மெக்சிகோவின் குவாடலஜாராவில் நடக்கும் 'ஏ' பிரிவு லீக் போட்டியில் உலகத் தரவரிசையில் 15வது இடத்திலுள்ள மெக்சிகோ, 25 வது இடத்திலுள்ள தென் கொரிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
உலக கோப்பை அரங்கில் 18 வது முறையாக பங்கேற்குகிறது மெக்சிகோ.
தவிர சொந்தமண் பலமும் சேர்ந்து கொள்ள, முதல் போட்டியில் 2-0 என தென் ஆப்ரிக்காவை எளிதாக வீழ்த்தியது. இன்று தனது இரண்டாவது போட்டியில் மீண்டும் மிரட்ட காத்திருக்கிறது. பிரிமியர் லீக் தொடரில் 9 கோல் அடித்து, சக வீரர்கள் 3 கோல் அடிக்க கைகொடுத்த கேப்டன் ரால் ஜிமனெஸ், மீண்டும் நம்பிக்கை தருகிறார். முதல் போட்டியில் கோல் அடித்த இவர் மறுபடியும் உதவலாம்.
தவிர அலெக்சிஸ் வேகா, ஜூலியன் ஆன்ரெசும் அசத்தும் பட்சத்தில் 'ரவுண்டு-32' சுற்றுக்கு முன்னேறுவது உறுதி. ஆறாவது முறையாக உலக கோப்பை தொடரில் பங்கேற்க, அனுபவ கோல் கீப்பர் கிலர்மோ ஒச்சாவோவுக்கு இடம் கிடைப்பது இன்று தெரியவரும்.
உலக கோப்பை தொடரில் 12வது முறையாக பங்கேற்கும் தென் கொரியா, சன் ஹியுங் மின் தலைமையில் களமிறங்குகிறது. முதல் போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இவர், ஒரு கோல் கூட அடிக்கவில்லை. மாறாக போட்டியின் 66 நிமிடத்தில், 0-1 என பின் தங்கி இருந்தது தென் கொரியா.
அதிர்ஷ்டவசமாக வாங் இன் பியோம், இயோன் ஜியு கோல் அடித்து உதவ, வெற்றி கிடைத்தது. தவிர, முன்கள வீரர் லீ காங்-இன், கிம் மின்-ஜே உதவினால், தென் கொரியா லீக் சுற்றை தாண்டலாம்.
மேலும் செய்திகள்
-
ஹேரி கேன் அசத்தல்; குரேஷியாவை வீழ்த்தியது இங்கிலாந்து
-
ஏமாற்றினார் ரொனால்டோ..! போர்ச்சுகல் - காங்கோ மோதிய போட்டி 'டிரா'
-
போர்ச்சுகல் அணிக்கு அதிர்ச்சி: காங்கோ அணியுடன் 'டிரா'
-
மெஸ்ஸி ஹாட்ரிக்: அட்டகாசமான ஆட்டத்தால் அர்ஜென்டினா வெற்றி
-
ஹாலண்ட் அட்டகாசம்... ஈராக் அணியை துவம்சம் செய்தது நார்வே!
-
எம்பாப்பே 2 கோல்; செனகலை 3-1 என வீழ்த்தி பிரான்ஸ் அபார வெற்றி