மெக்சிகோ சின்னம் 'வாத்து'

மெக்சிகோ அணி, முதல் போட்டியில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியதை, ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதில் மெக்சிகோவின் பச்சை நிற ஜெர்சி அணிந்த 'மெர்லின்' என்ற 2 வயதுடைய வாத்து, எதிர்பாராமல் நாடு முழுவதும் பிரபலம் ஆகியுள்ளது.
மெக்சிகோ சிட்டியில் திருவிழாக்களில் குளிர்பானங்கள் விற்கும் தெரு வியாபாரி கார்லா கோமஸ், மெர்லினை பாராமரித்து வருகிறார். இவர் செல்லும் இடம் எல்லாம் பின்னால் மெர்லினும் செல்வது, ரசிகர்களுடன் 'போஸ்' கொடுப்பது போன்ற 'வீடியோ', சமூக வலைதளங்களில் இப்போது வைரல் ஆகியுள்ளது.
இதுகுறித்து கார்லா கோமஸ் கூறுகையில்,'' எங்கள் குடும்பம் எங்கு சென்றாலும் உடன் வந்து விடும். தற்போது, இவ்வளவு பிரபலம் அடையும் என நான் நினைக்கவில்லை,'' என்றார்.
உலக கோப்பை கால்பந்தில் மெக்சிகோ அணியின் சின்னமாக, மனித உருவ சிறுத்தை (ஜாயு) உள்ளது. ஆனால் இப்போது அறிவிக்கப்படாத சின்னமாக 'மெர்லின்' கொண்டாடப்படுகிறது.
இந்த வரிசையில் நேற்று சில மெக்சிகோ ரசிகர்கள் தங்களது செல்ல நாய்களுக்கு, 'ஜெர்சி' அணிவித்து அழைத்து செல்லத் துவங்கி விட்டனர்.