தென் ஆப்ரிக்கா-செக்குடியரசு 'டிரா': உலக கோப்பை கால்பந்தில் 'விறுவிறு'

அட்லாண்டா: தென் ஆப்ரிக்கா, செக்குடியரசு அணிகள் மோதிய உலக கோப்பை கால்பந்து லீக் போட்டி 1-1 என 'டிரா' ஆனது.


அமெரிக்காவின் அட்லாண்டாவில் உள்ள மெர்சிடஸ்-பென்ஸ் மைதானத்தில் நடந்த உலக கோப்பை கால்பந்து 'ஏ' பிரிவு லீக் போட்டியில் செக்குடியரசு, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. ஆட்டத்தின் 6வது நிமிடத்தில் அலெக்சாண்டர் சோஜ்கா 'பாஸ்' செய்த பந்தில் செக்குடியரசின் மிச்சல் சாடிலெக் ஒரு கோல் அடித்தார். இதற்கு தென் ஆப்ரிக்க வீரர்களால் பதிலடி கொடுக்க முடியவில்லை. முதல் பாதி முடிவில் செக்குடியரசு அணி 1-0 என முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியின் 83வது நிமிடத்தில் தென் ஆப்ரிக்காவுக்கு கிடைத்த 'பெனால்டி' வாய்ப்பில் மோகோயெனா ஒரு கோல் அடித்தார். ஆட்டநேர முடிவில் போட்டி 1-1 என 'டிரா' ஆனது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.