'சூப்பரா' வென்றது சுவீடன்: உலக கோப்பை கால்பந்தில்
மான்டேரி: மெக்சிகோவின் மான்டேரி நகரில் நடந்த 'எப்' பிரிவு லீக் போட்டியில் சுவீடன், துனிசியா அணிகள் மோதின. இப்போட்டியை காண 50,987 பேர் வந்தனர். துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய சுவீடன் அணி 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. சுவீடன் அணிக்கு யாசின் அயாரி 2 (7, 90+6வது நிமிடம்), அலெக்சாண்டர் இசாக் (30வது), விக்டர் கியோகெரெஸ் (59வது), மாட்டியாஸ் ஸ்வான்பெர்க் (84வது) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர். துனிசியா சார்பில் ஓமர் ரெகிக் (43வது நிமிடம்) ஒரு கோல் அடித்தார்.
சுவீடன் வீரர் விக்டர் கியோகெரெஸ், தனது 21வது சர்வதேச கோல் அடித்தார். இதில் கடைசியாக விளையாடிய 15 போட்டியில், 16 கோல் பதிவு செய்தார்.
நெதர்லாந்து - ஜப்பான் 'டிரா'
டல்லாஸ்: அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் நடந்த மற்றொரு 'எப்' பிரிவு லீக் போட்டியில் ஜப்பான், நெதர்லாந்து அணிகள் மோதின. இப்போட்டியை காண 69,285 ரசிகர்கள் வந்தனர். முதல் பாதி கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தது. இரண்டாவது பாதியின் 50வது நிமிடத்தில் நெதர்லாந்தின் விர்கில் வான் டைக் ஒரு கோல் அடித்தார். இதற்கு, 57வது நிமிடத்தில் ஜப்பானின் கீட்டோ நகமுரா ஒரு கோல் அடித்து பதிலடி தந்தார். ஆட்டத்தின் 64வது நிமிடத்தில் நெதர்லாந்தின் கிறிசென்சியா சம்மர்வில் ஒரு கோல் அடித்து 2-1 என முன்னிலை பெற்றுத்தந்தார். பின், 88வது நிமிடத்தில் ஜப்பான் அணிக்கு கிடைத்த 'கார்னர் கிக்' வாய்ப்பில் கோகி ஒகாவா துாக்கி அடித்த பந்தை டைச்சி கமடா தலையால் முட்டி கோல் அடித்தார். ஆட்டநேர முடிவில் போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் 'டிரா' ஆனது. உலக கோப்பை லீக் சுற்றில் நெதர்லாந்து அணி தொடர்ச்சியாக 17 போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல் வலம் வருகிறது.
மேலும் செய்திகள்
-
உலகக் கோப்பை கால்பந்து: தென்கொரியாவை வீழ்த்தி மெக்சிகோ அபாரம்
-
ஜோனாதன் டேவிட் 'ஹாட்ரிக்'; கத்தாரை வீழ்த்தி கனடா சாதனை வெற்றி!
-
அசத்திய இளம் வீரர்கள்! போஸ்னியாவை துவம்சம் செய்தது ஸ்விட்சர்லாந்து
-
தென் ஆப்ரிக்கா-செக்குடியரசு 'டிரா': உலக கோப்பை கால்பந்தில் 'விறுவிறு'
-
ஹேரி கேன் அசத்தல்; குரேஷியாவை வீழ்த்தியது இங்கிலாந்து
-
ஏமாற்றினார் ரொனால்டோ..! போர்ச்சுகல் - காங்கோ மோதிய போட்டி 'டிரா'